;
Athirady Tamil News

இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை: நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி..!!

0

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னா எனும் பகுதியில் ஒரு பெண் 3 வாலிபர்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது , குறித்த சம்பவத்தை சந்தேகநபரொருவர் காணொளி பதிவு செய்து இணையத்தில் வௌியிட்டுள்ளார்.மூன்று வாலிபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டிற்குள் இழுத்து செல்கின்றனர். அந்த பெண் அவர்களிடம் தன்னை விட்டு விடும்படி கெஞ்சுகிறார்.

ஆனால், அதை ஏற்காமல் அந்த வாலிபர்கள் அவரை இழுத்து செல்கின்றனர். இதை மற்றொருவர் கைப்பேசியில காணொளி பதிவு செய்கிறார்.

இந்த காணொளி தற்போது வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கங்காகத் காவற்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 15 =

*