;
Athirady Tamil News

வவுனியாவில் மாதிரி கிராமத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!! (படங்கள்)

0

வவுனியா தரணிக்குளம் புதியநகர் பகுதியில் 17 வீடுகளை கொண்ட மாதிரிக் கிராமம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (07) கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எஸ்.ராகுலன் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாதிரிகிராம திட்டத்திற்கு அமைவாக இவ்வருடத்திற்கான 100 கிராமங்கள் உருவாக்கும் செயற்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் 37 வது மாதிரி கிராமத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தரணிக்குளம் புதியநகர் பகுதியில் நடைபெற்றது.

தரணிக்குளம் அம்மன் ஆலயத்தில் விசேடபூசை வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
கிராம மக்களால் மாலை அணிவித்து அழைத்துவரப்பட்ட அதிதிகளால் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் வி. சிவலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபை தலைவர் து.நடராயசிங்கம், வீடமைப்பு அதிகாரசபையின் உதவிமுகாமையாளர் சந்திரசேகரன், மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்களான மங்களநாதன், விஸ்வநாதன், கிராமசேவகர் அஞ்சலிதாஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் யோர்ச் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தரணிக்குளம் புதியநகரில் மாதிரிக்கிராமம் அமைப்பதற்கான பயனாளிகள் தெரிவு பிரதேச செயலகத்தின் மூலம் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 1 =

*