;
Athirady Tamil News

நல்லூர் இளைஞர்கழக சம்மேளனங்களின் வருடாந்த விளையாட்டு விழா..!! (படங்கள்)

0

நல்லூர் இளைஞர்கழக சம்மேளனங்களின் வருடாந்த விளையாட்டு விழா – வடமாகாணசபை உறுப்பினர், உள்ளூராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நல்லூர் பிரதேச இளைஞர்கழக சம்மேளனங்களின் வருடாந்த விளையாட்டுவிழா இன்று இன்று 07.07.2018 சனிக்கிழமை மாலை 04 மணியளவில் அரியாலை சரஸ்வதி விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந், நல்லூர் பிரதேசசபையின் உபதவிசாளர் இ.ஜெயகரன் , வலி.கிழக்கு(கோப்பாய்) பிரதேச சபை உறுப்பினர் சி.அகீபன், யாழ்.மாவட்ட இளைஞர் சேவைகள் பணிப்பாளர் ஐ.தபேந்திரன் நல்லூர் பிரதேசசெயலக இளைஞர்சேவைகள் உத்தியோகத்தர் இ.யுகராஜ், நல்லூர் பிரதேசசெயலக விளையாட்டு உத்தியோகத்தர் செ.மயூரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விளையாட்டு வீரர்கள் விருந்தினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி, ஆண் – பெண் இருபாலாருக்குமான தனித்தனியான கபடி, கூடைப்பந்தாட்டம் என்பன இடம்பெற்றதுடன், ஏற்கனவே இடம்பெற்ற விளையாட்டுக்களில் வெற்றிபெற்ற அணியினருக்கான வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் விருந்தினர்களுடன் விளையாட்டு வீர, வீராங்கனைகள், இளைஞர்கள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 11 =

*