;
Athirady Tamil News

வவுனியாவில் சுகாதார வாரம் நகரசபையால் அனுஸ்டிப்பு..!! (படங்கள்)

0

‘சுத்தமும் பசுமையும்’ எனும் தொனிப்பொருளில் சுகாதார வாரம் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இன்று (07) சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் நடைபெற்றது.

வவுனியாவில் சுமார் ஆறு வாரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு நகரசபைக்குட்பட்ட அனைத்து வட்டாரங்களிலும் ஒவ்வொரு கிழமைகள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுகாதாரப்பகுதிக்கு பொறுப்பான உப நகரபிதா எஸ்.குமாரசாமி, நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை சுத்தமாகவும் பசுமை நிறைந்தாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும். இன,மத ,மொழி ,சாதி ,பிரதேச, அரசியல் வட்டங்களுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டி இருக்கிறது. இதனால் நமது நகர சபைப் பிரதேசத்தை சுத்தமாக வேணுவதோடு இலங்கையில் ஒரு முன்னுதாரணமான பிரதேசமாக ஆக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு நீங்களும் இப் பணியில் இணையுமாறு அன்பாக வேண்டுகின்றேன் என குறிப்பிட்டார்.

இச்சிரமதானப்பணியில் பாராளுமன்றஉறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை தவிசாளர் இ. கௌதமன், உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் (மோகன்),றசூல்லரிப்,பாலபிரசன்னா, ரி.கே.ராஜலிங்கம், அப்துல் பாரி, பிரதேச செயலாளர் கா.உதயராசா பொலிஸ் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி சமூக மட்ட அமைப்புகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*