;
Athirady Tamil News

அபிவிருத்தி திட்டங்களை ஜனநாயக முறையிலும் மக்களுக்கு பதில் சொல்லும் வகையிலும் ஆற்றவேண்டும்!! வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்..!!

0

அபிவிருத்தி திட்டங்களை ஜனநாயக முறையிலும் மக்களுக்கு பதில் சொல்லும் வகையிலும் ஆற்றவேண்டும்!! வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

புனர்வாழ்வு மீள்குடியேற்ற வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானிற்கு கௌரவிப்பு நிகழ்வு ஒன்று (06) வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

தோடர்ந்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்
இந்தப்பகுதியை கௌரவப்படுத்தி ஐனாதிபதியால் குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிநபருக்கான பதவி இல்லை இது உங்களுக்கானது. இந்த அமைச்சை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் கட்சி, சமயபாகுபாடு இன்றி எவ்வாறான வேலைதிட்டங்களை மேற்கொள்வது என்பது தொடர்பாக நாம் சிந்தித்து வருகிறோம்.
சிலர் நினைக்கிறார்கள் தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுப்பதை கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என்று ஆனால் நாம் அப்படி அல்ல. நாம் செய்யும் அபிவிருத்தி திட்டங்களை ஜனநாயக முறையிலும் மக்களுக்கு பதில் சொல்லும் வகையிலும் ஆற்றவேண்டும். அத்துடன் இந்த கிராமத்திற்குரிய வீட்டு திட்டங்களை கட்டம், கட்டமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன். அதே போல் காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குவதற்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

அத்துடன் இப்பகுதியில் சுகாதாரநிலையம் ஒன்று அமைப்பதற்காக விரைவான நடவடிக்கைகளை எடுப்பேன். கடந்த காலங்களில் செய்யப்பட்ட வேலைதிட்டங்களின் குறைபாடு காரணமாகவும், கட்சிசார்பாக செயற்பட்ட சந்தர்பங்களாலேயுமே நான் அரசியலுக்கு வரவேண்டியிருந்தது. எனது அமைச்சினூடாக அவ்வாறான வேலைதிட்டங்கள் நடைபெறும் பொழுது மக்களாகிய நீங்கள் அதனை எதிர்ப்பதுடன் எனது கவனத்திற்கும் கொண்டு வரவேண்டும். அப்போதே சரியான திட்டங்களை செயற்படுத்த முடியும்.

அரசியல் வாதிகள் மக்களை பிரித்தாழுவதில் தான் கவனமாக இருப்பார்கள் ஏனெனில் அவர்களின் அரசியல் எதிர்காலத்திற்காக ஆனால் நாம் அப்படி இல்லை. மாதத்தில் இரண்டு நாட்கள் எனது அலுவலகத்தில் மக்கள் சந்திப்புகளை நடாத்த இருக்கிறேன் உங்கள் பிரச்சனைகளை நேரடியாக என்னிடம் கூறுங்கள் என தெரிவித்தார்.
வளர்பிறை விiயாட்டுகழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேக செயலர் ஆரிப்,தெற்கு தமிழ் பிரதேசசபை உபதலைவர் வே.மகேந்திரன்,வவுனியா நகரசபை உபதலைவர் வே.குமாரசாமி,வட்டார வேட்பாளர் அலாத் மௌலவி மற்றும் பொதுமக்கள் என பலர்; கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 16 =

*