;
Athirady Tamil News

அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி..!!

0

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சுவீடன் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன்று இடம்பெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 2 – 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி 1966 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவீடன் – இங்கிலாந்து அணிகளும் மோதிய போட்டிகளில் இதுவரை இங்கிலாந்து அணி 8 போட்டிகளிலும், சுவீடன் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

இதேவேளை, இன்று மற்றுமொரு காலிறுதி போட்டியும் நடைபெறுகிறது. இப்போட்டி ரஷ்யா – குரோஷிய அணிகளுக்கு இடையே நடைபெறுகின்றது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + eighteen =

*