;
Athirady Tamil News

வங்காளதேசம் – சாலை விபத்தில் 6 பேர் பலி..!!

0

வங்காளதேசத்தின் மவுல்விபசார் மாவட்டத்தில் நடாம்பூர் பகுதியில் அமைந்துள்ளது மவுல்விபசார் – சிதெட் நெடுஞ்சாலை.

இந்த நெடுஞ்சாலையில் இன்று இரவு 7 மணியளவில் சென்று கொண்டிருந்த காரும் ஆட்டோ ரிக்‌ஷாவும் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 12 =

*