;
Athirady Tamil News

மீள்குடியேற்ற புனர்வாழ்வு பிரதி அமைச்சரிற்கான கௌரவமளிப்பு விழாவும் மக்கள் சந்திப்பும்..!! (படங்கள்)

0

மீள்குடியற்ற புனர்வாழ்வு பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தானிற்கான கௌரவமளிப்பு விழாவும் மக்கள் சந்திப்பும் இன்று நேரியகுளம் கிராம சேவகர் அலுவலக முன்றலில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செட்டிக்குளம் பிரதேசசபை உறுப்பினர் ஜே.டெல்சன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மீள்குடியற்ற புனர்வாழ்வு பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தானிற்கு ஆறு கிராமங்களை சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளினால் மாலை அணிவித்து கௌரவமளிக்கப்பட்டிருந்ததுடன் இக்கிராம மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு பிரதி அமைச்சர் மக்களுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் செட்டிக்குளம் பிரதேசசபை தவிசாளர் ஆசிர்வாதம் அந்தோணி, பிரதேசசபை உறுப்பினர் ம.சாந்தகுமாரி, நேரியகுளம் கிராம சேவகர் மு.சிம்சார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 12 =

*