;
Athirady Tamil News

அரையிறுதியில் இங்கிலாந்து அணி – பிரிட்டிஷ் ஏர்வேஸ் வித்தியாசமான வாழ்த்து..!!

0

அரையிறுதியில் இங்கிலாந்து அணி – பிரிட்டிஷ் ஏர்வேஸ் வித்தியாசமான வாழ்த்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து, சாம்பியன் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பிரத்யேக வாழ்த்து தெரிவித்துள்ளது.

அரையிறுதியில் இங்கிலாந்து அணி – பிரிட்டிஷ் ஏர்வேஸ் வித்தியாசமான வாழ்த்து

ரஷியாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்து, குரோசியா மற்றும் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோத உள்ளன. இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை பெற வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 14-ம் தேதி இரவு நடக்க உள்ள இறுதிப்போட்டியில் நிச்சயமாக இங்கிலாந்து விளையாடும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பிரத்யேக வாழ்த்தை தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் இருந்து லண்டனுக்கு 15-ம் தேதி அணி வருகிறது என்பதை குறிக்கும் வகையில் போர்டிங் பாஸ் வடிவிலான அந்த வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 6 =

*