;
Athirady Tamil News

குழந்தை கடத்தல் – போலி வீடியோ, வதந்தியால் 20 பேர் அடித்துக்கொலை..!!

0

குழந்தை கடத்தல் பீதி தற்போது நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் தொடங்கி தற்போது மராட்டியம், டெல்லி என வட மாநிலங்களிலும் தீவிரமாகியுள்ளது.

இதற்கு போலி வீடியோக்கள் மற்றும் வதந்தி தான் முக்கிய காரணமாக உள்ளது. சமூக வலைதளங்களில் இவற்றை பரப்பி சிலர் மக்களை பீதியில் ஆழ்த்துகிறார்கள்.

இதனால் பதட்டம் அடையும் மக்கள் கும்பலாக திரண்டு அப்பாவிகளை அடித்துக் கொலை செய்கிறார்கள். சமீபத்தில் மராட்டிய மாநிலம் துலே பகுதியில் ரெயின்பாடா என்ற இடத்தில் ஒரு கும்பல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

அதே நேரத்தில் மலேகானில் ஒரு கும்பல் நடத்திய தாக்குதலில் இருந்து 5 பேர் காப்பாற்றப்பட்டனர். அங்கு போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.

சமீபத்தில் வாட்ஸ்அப், மற்றும் பேஸ்புக்கில் பரவிய வீடியோ பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து பரவியுள்ளது. பாகிஸ்தானில் கடத்தலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த வீடியோ விளம்பர படமாக தயாரிக்கப்பட்டது.

அதில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து உள்ளனர். அந்த வீடியோ இந்தியாவில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று பெங்களூரு, சென்னை நகரங்களில் இருந்தும் போலி வீடியோக்கள் மற்றும் வதந்திகள் பரப்பபட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பரவும் குழந்தை கடத்தல் போலி வீடியோ மற்றும் வதந்தியால் இந்தியாவில் 2 மாதத்தில் 20 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய போலி வீடியோக்கள் மற்றும் வதந்தி இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா, பிரேசில் போன்ற வளர்ந்த நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

போலி செய்தியை நம்பி அமெரிக்காவின் பீட்ஷா கடையில் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தினான். எனவே இதை தடுக்க வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உரிமையாளர் நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் முடியவில்லை.

இதற்கிடையே நாடு முழுவதும் குழந்தை கடத்தல் பீதியை தடுத்து நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகமும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் பரவும் வதந்தியை தடுக்க தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் குழந்தை கடத்தல் பீதியை தடுக்க சமூக வலைதளங்கள் அத்தகைய தொழில்நுட்டபத்தை கொண்டு வரவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*