;
Athirady Tamil News

கொலை நடந்த 11-வது நாளில் தீர்ப்பு – மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..!!

0

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள வல்சே கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்வர் சுவாமி(75). இவரது மனைவி புட்டம்மா(63). இந்த வயதிலும் தனது மனைவிக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட பரமேஸ்வர், அடிக்கடி புட்டம்மாவுடன் தகராறு செய்து, அடித்து, உதைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி ஆத்திரத்தில் புட்டம்மாவை பரமேஸ்வர் சுவாமி அடித்து கொன்றார். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற போலீசார் பரமேஸ்வர் சுவாமியை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து சித்ரதுர்கா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பரமேஸ்வரின் நடவடிக்கைகள் தொடர்பாக அவரது மகன் கூறிய எதிர் சாட்சியால் வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இந்நிலையில், புட்டம்மா கொல்லப்பட்ட 11-வது நாளான நேற்று (சனிக்கிழமை) இவ்வழக்கில் தீர்ப்பளித்த சித்ரதுர்கா மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.பி, வஸ்த்ரமுத் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

கர்நாடக மாநில குற்றவியல் நீதிமன்ற வரலாற்றில் 11 நாட்களில் ஒரு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது, இதுவே முதல்முறை என்று சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரட் ஸ்ரீநாத் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*