;
Athirady Tamil News

தயிர் அதிகம் சேர்த்துக் கொண்டால் இந்த நோய் உங்கள் பக்கம் வரவே வராது..!!

0

அன்றாட உணவில் நாம் தயிர் அதிகம் சேர்த்துக் கொண்டால், இதய நோய் பாதிப்பு வராது என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து தயிரை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது தனியாக எடுத்தாலும் சரி இதயம் ஆரோக்கியமாக இயங்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 30 முதல் 55 வயதுக்குள்பட்ட 50,000 பெண்களும், 40 முதல் 75 வயதுக்குள்பட்ட 18,000 ஆண்களும் பங்கேற்றனர்.

ஆய்வில் பங்கேற்ற அனைவரும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு குழுவுக்கு, தினமும் தயிர் வழங்கப்பட்டது. அடுத்த குழுவுக்கு அவ்வப்போது மட்டும் தயிர் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தினமும் தயிர் சாப்பிட்ட குழுவினரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது அவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் குறைவாக இருந்தது தெரியவந்ததுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − nineteen =

*