;
Athirady Tamil News

உ.பி.யில் சோகம் – குளிக்க சென்றபோது கங்கையில் மூழ்கிய 3 சிறுவர்கள் உடல் மீட்பு..!!

0

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பாபுபூர்வா பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள், அங்குள்ள கங்கை ஆற்றில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கங்கை ஆற்றில் சிறுவர்கள் மூழ்கினர். இதுபற்றி தகவலறிந்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்றனர்.

மீட்பு பணியில் 3 சிறுவர்களின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டது. விசாரணையில் சிறுவர்களின் வயது 12 முதல் 15 வயதுடையவர்கள் என தெரிய வந்தது. மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − three =

*