;
Athirady Tamil News

வவுனியாவில் வாள் வெட்டு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் வைத்தியாசாலையில் அனுமதி..!! (படங்கள்)

0

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (07) மாலை 7 மணியளவில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் அப்பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது வாள் வீசி தாக்குதல் நடாத்தியதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பூந்தோட்டம் மற்றும் பெரியார்குளம், தோணிக்கல் பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை வவுனியா குற்றதடுப்பு போலிசார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து ஒரு வாள், கோடரி, கேபிள்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் என்பனவற்றை போலிசார் மீட்டுள்ளனர். அத்துடன் மதினா நகர் பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் இருவர் காயமடைந்து வவுனியா வித்தியாசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

நேற்றையதினம் தினம் மது போதை காரணமாக ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 7 பேர் வவுனியா வைத்தியசாலையின் விபத்துபிரிவில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலை விபத்துப்பிரிவு தெரிவித்துள்ளது

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*