;
Athirady Tamil News

ரிவேல்வர் மற்றும் ஹெரோயினுடன் மூவர் கைது..!!

0

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரிவேல்வர் மற்றும் ஹெரோயினுடன் மூவரை கைது செய்யப்பட்டு கடவத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (08) மாலை 4.25 மணியளவில் களனி குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து என்டேரமுல்ல பகுதியில் வைத்து ரிவேல்வர் ஒன்றும், அதற்கான தோட்டக்கள் 5 உம், ஹெரோயின் 18 கிராம் 860 மில்லிகிராமும் 125,000 ரூபா பணமும், 5 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

32 மற்றும் 30 வயதுடைய கடவத்த மற்றும் வத்தள பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடவத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 12 =

*