;
Athirady Tamil News

பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் 60 பேர் வைத்தியசாலையில்..!! (படங்கள்)

0

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் மெல்சிறிபுர, கொகரெல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 60 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த பேருந்தும் எம்பிலிபிட்டியவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

விபத்தில் பலத்த காயமடைந்த 50 பேர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த விபத்தில் காயமடைந்த இரு பேருந்துகளினதும் ஓட்டுனர்கள் உட்பட 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 2 =

*