;
Athirady Tamil News

மாணவனை தாக்கிய அதிபருக்கு கடூழியச் சிறை..!!

0

மாணவன் ஒருவனை வன்மையாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில், பொல்பிதிகம தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருக்கு குருநாகல் மேல் நீதிமன்ற நீதவான், மேனகா விஜேசுந்தர இன்று (09) 3 வருடகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மொரகொல்லாகம பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய, ஓய்வுப் பெற்ற அதிபரான ராஜகருண முதியன்சலாகே ஜயவர்தன பண்டார என்பவருக்கே இவ்வாறு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10,000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 100,000 ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*