;
Athirady Tamil News

பிரித்தானியாவில் இரயிலில் சென்ற நிறை மாத கர்ப்பிணி பெண்ணை பயணிகள் எப்படி பார்க்கின்றனர்? வெளியான வீடியோ..!!

0

பிரித்தானியாவில் இரயிலில் நிறை மாத கர்ப்பிணி பெண் பயணம் செய்தால் அவர்களுக்கு பயணிகள் இடம் தருகிறார்களா, இல்லையா என்பதைப் பற்றி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் லண்டன் இரயில் நிலையத்தில் ஏறும் Anna Whitehouse என்ற பெண் போலியா வயிற்றை பெரிதாக்கிக் கொண்டு நிறைமாத கர்ப்பிணி போன்று ஏறியுள்ளார்.

இதில் எத்தனை பயணிகள் இடம் தருகின்றனர் என்பதைப் பற்றி பார்ப்போம். இரயிலில் சென்று கொண்டிருக்கும் போது சராசரியாக 10-ல் 4 பேர் தான் இடம் தருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது

இது குறித்து Anna Whitehouse கூறுகையில், இரயிலில் பெரும்பாலான மக்கள் செல்போனை பயன்படுத்திக் கொண்டே செல்வதால், அருகில் யார் இருக்கின்றனர் என்பதை பார்க்க முடியவில்லை.

இதனால் அருகில் கர்ப்பிணி பெண் இருந்தாலும் அவர்களுக்கு தெரிவதில்லை என்று கூறியுள்ளார்.மேலும் 61 சதவீத வயதானவர்கள் தானாக முன் வந்து இடம் தருகிறார்கள்

இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது 56.15 சதவீதம் பேர் தானாக முன்வந்து டிக்கெட் எடுத்து கொடுக்கிறார்கள்

அதுவே கையில் சூட்கேஸ் போன்றவைகள் கொண்டு சென்றிருந்தால் 50.50 சதவீதம் மக்கள் உதவி செய்கிறார்கள்.

40.40 சதவீத மக்கள் கர்ப்பிணி பெண்களுக்கு இரயிலின் விண்டோ சீட் தருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 8 =

*