;
Athirady Tamil News

பிரித்தானியாவில் இளம் பெண் செய்த அதிர்ச்சி செயல்: தப்பிக்க போராடிய நாயின் பரிதாப வீடியோ..!!

0

பிரித்தானியாவில் இளம் பெண் தன்னுடைய நாயை சுவற்றில் வீசுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Ferndown பகுதியைச் சேர்ந்த Cheryl Kirkhope என்ற இளம் பெண் சமீபத்தில் தன்னுடைய நாயை சுவரின் மீது தூக்கி வீசுவது போன்ற வீடியோ வெளியானது.

அதில் அவர் நாயை ஒரு முறைக்கு இரு முறை சுவற்றின் மீது தூக்கி வீசியதால், கீழே விழுந்த நாய் அவரிடமிருந்து தப்பிப்பதற்கு போராடியது

இந்த வீடியோவை இணையத்தில் கண்டு அதிர்ச்சியடைந்த இணைவாசிகள், இது குறித்து அவர் மீது புகார் அளித்துள்ளனர்.

அதன் பின் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண் இருக்கும் இடம் குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் அந்த பெண்ணின் வீட்டில் இருந்த நான்கு நாய்களை மீட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து RSPCA-விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + nine =

*