;
Athirady Tamil News

பறக்கும் விமானத்தின் கழிவறையில் அட்டகாசம் செய்த இளைஞர்..!!

0

அயர்லாந்தில் இருந்து நோர்வே நாட்டிற்கு சுற்றுலா சென்ற 20 வயது பயணி ஒருவர் பறக்கும் விமானத்தின் கழிவறையில் சென்று குடித்துவிட்டு அட்டகாசம் செய்ததால் சக பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

கழிவறைக்கு சென்ற இந்த நபர், புகைபிடித்துள்ளார், பின்னர் மது அருந்திவிட்டு வெளியே வந்த இந்நபர் அட்டகாசம் செய்துள்ளார்.

விமானத்தில் 5 பயணிகள் மீது தாக்குதுல் நடத்தியதோடு மட்டுமல்லாமல் தனது இருக்கையில் அமராமல் பிரச்சனை செய்துள்ளார்.

இதனால், நடுவானில் வைத்து இவருடன் விமான பணிப்பெண்கள் மல்லுக்கட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது. ஒரு வழியாக இவரை சமாதானப்படுத்தி அமரவைத்துள்ளனர்.

பின்னர் விமானம் Oslo விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், இந்நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், இந்த சம்பவங்கள் இதுபோன்று நடைபெறாமல் இருக்க விமான நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 12 =

*