;
Athirady Tamil News

தனித்தனியே வாழும் பெற்றோர்: 6 வயது சிறுமியை கொலை செய்து வீசிய நபர் யார் ?..!!

0

ஸ்காட்லாந்தில் உள்ள ஐஸில் பியூட் தீவில் கடந்த திங்கள் கிழமையன்று காலை 6.30மணிக்கு ஆறு வயது சிறுமி அலிஷா அவளது படுக்கைறையில் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தந்ததன் பெயரில் அவர்களின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்பு காணாமல் போன இடத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் பிரபல ஓட்டல் அருகே மரங்களடர்ந்த பகுதியில் அலிஷா பிணமாக கண்டெடுக்கப்பட்டாள்.

சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அலிஷாவின் மரணத்திற்கான காரணங்களை அவர்கள் இதுவரை வெளியிடவில்லை

ஆறு வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் ஸ்காட்லாந்து போலீசார் 16 வயது சிறுவன் ஒருவனை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் கைது செய்தவர் பற்றிய எந்த விவரங்களையும் காவல்துறை வெளியிடவில்லை.

அலிஷாவின் தந்தை வழி தாத்தா பாட்டி வீடு ஸ்காட்லாந்தில் உள்ள ஐஸில் பியூட் தீவில் உள்ளது. தனது விடுமுறையை கழிக்க அலிஷா இங்கு வந்திருக்கிறாள்.

விடுமுறை முடிய சில நாட்களே இருந்த நிலையில் சிறுமி இப்படி மர்மமாக மரணமடைந்திருப்பது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது

மகள் இறந்த தகவலை சமூக வலைத்தளம் மூலமாகவே அறிந்திருக்கிறார் அவரது அம்மா Ms Lochrane. தனது மகளை காணவில்லை என்பதையும் பின்னர் தனது மகள் இறந்து விட்டாள் என்பதையும் முகநூல் பதிவொன்றின் மூலம் அறிந்திருக்கிறார். அதன் பின் தனது துணை ஹார்ன் உடன் குறித்த தீவுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்

அலிஷாவின் தந்தை Rab MacPhail, 25 இவர் தனது தோழி டோனியுடன் அதே வீட்டில் வசித்து வருபவர்.

நடந்த துயரத்தால் இவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரியவருகிறது. சிறுமி காணாமல் போனதில் இருந்து அவரது தாத்தா பாட்டி இருவரும் வீட்டிலேயே அடைந்து கிடப்பதாக கூறப்படுகிறது

அக்கம்பக்கத்தினர் இதுபற்றி கூறுகையில் தாத்தா பாட்டி ஒரு அறையிலும், அலிஷாவின் தந்தையும் அவரது தோழியும் ஒரு அறையிலும் அலிஷா ஒரு அறையிலும் உறங்குவது வழக்கம் என்று கூறினர்.

ஆறு வயது சிறுமி அலிஷாவின் மரணத்திற்கு ஐஸில் பியூட் தீவை சேர்ந்த மக்கள் பொம்மைகளையும் பூக்களையும் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இந்த தீவு பாதுகாப்பான தீவு. வீட்டை திறந்து போட்டு விட்டு வெளியே சென்றாலும் எந்த குற்றமும் நடைபெறாத அளவுக்கு நம்பிக்கையான தீவு இது. இதில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்று அவர்கள் தங்கள் இடுகையில் கூறியிருந்தனர்.

இந்த மர்ம மரணத்திற்கு பின் வீட்டில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ளும்படி காவல்துறையினர் அங்குள்ளோரிடம் அறிவுரை செய்தது குறிப்பிடத்தக்கது

ஒரே வீட்டில் தனி தனி அறைகளில் வாழ்வது பெரியவர்களுக்கு வேண்டுமானால் பாதுகாப்பானதாக இருக்கலாம். குழந்தைகளுக்கு அல்ல. என்பதை பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + twelve =

*