;
Athirady Tamil News

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி இருவர் வைத்தியசாலையில்..!!

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹஹேதெக்ம மற்றும் பத்தேகம பகுதிகளுக்கு இடையில் ஜீப் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (09) பிற்பகல் 3.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

70.4 ஆவது கிலோ மீற்றர் கட்டைக்கு அருகில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று கவிழ்ந்து சென்று பாதை ஓரத்தில் உள்ள பாதுகாப்பு வேலியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பாதுக்க, வேரகல பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நதீரா சந்திரமாளி எனும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*