;
Athirady Tamil News

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..!!

0

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தப்போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க மருத்துவர்கள் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தவகையில் குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் விட்டால் எதிர்வரும் 17ஆம் திகதி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளப்போவதாக அரசாங்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வரிவிதிப்பு, தேசிய சம்பள கொள்கை, சிங்கப்பூருடனான சுதந்திர உடன்படிக்கையை இரத்து செய்ய வேண்டும் , பதவி உயர்வு தொடர்பில் தீர்க்கப்படாத விடயங்கள் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச் சங்கம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − twelve =

*