;
Athirady Tamil News

கரும்புலிகள் தினம் தொடர்பாக தென்பகுதியில் வெளியாகியது கருத்து தவறானது..!!

0

வடக்கில் கரும்புலி தினம் நினைவு கூரப்பட்டமையை தென் இலங்கையில் உள்ள பிரிவினைவாத அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் தவறான கருத்தை தெரிவித்து வருவதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி கரும்புலிகள் தினம் வடக்கில் வல்வெட்டித்துறை, நெல்லியடி மற்றும் கிழக்கில் வாகரையிலும் நடத்தப்பட்டது.

இனவாத கருத்துக்களை தெரிவிக்கும் விமல் வீரவன்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர், கரும்புலி தினம் அனுஷ்டித்தவர்களை கைது செய்ய வேண்டும் என பல்வேறு இடங்களில் கூறி வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் தற்போது அச்ச உணர்வில் உள்ளார்கள்.

குறிப்பாக கரும்புலி தினத்தை நினைவுகூர கூடாது என அரசாங்கம் எவ்வித அறிவித்தலையும் பிறப்பிக்கவில்லை. இந்நிலையிலே உயிரிழந்தவர்களுக்கு உறவினர்களால் அஞ்சலி மட்டுமே செலுத்தப்பட்டதே அன்றி வேறு ஒன்றும் அங்கு இடம்பெறவில்லை எனவும் அவர் கூறினார்.

அத்துடன் குறித்த நிகழ்வு தொடர்பில் 3 நாட்களுக்கு முன்னர் முகநூலில் அறிவித்திருந்ததாக தெரிவித்த அவர், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் முன் பகிரங்கமாகவே இடம்பெற்றதாக கந்தசாமி இன்பராசா கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + four =

*