;
Athirady Tamil News

டெனீஸ்வரனுக்கு ஆசன ஒதுக்கீடு -மாகாண சபையில் கடும் சர்ச்சை- உறுப்பினர்கள் சலசலப்பு..!!

0

வடக்கு மாகாண பேர­வைச் செய­ல­கத்­தின் சபா மண்­ட­பத்­தில் அமைச்­ச­ரவை ஆச­னம் தனக்கு ஒதுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று பா.டெனீஸ்­வ­ரன், அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னத்­தி­டம் கோரி­க்கை விடுத்த விவகாரம் மாகாண சபையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாகாண சபை அமர்வு இன்று நடைபெற்றது. அதில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது. இதனால் உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதற்குப் பதிலளித்த வடக்கு அவைத்தலைவர், வடக்கு ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவரது பதில் கிடைக்கப் பெற்ற பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*