;
Athirady Tamil News

120 ரூபா பிஸ்கற்றை- திருடிய பெண்ணுக்கு- 1,500 ரூபா தண்டம்- ஒரு வருடம் கடூழிய சிறை..!!

0

கம்பஹா யக்கல சீயனே விலேஜ் பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் பிஸ்கற் திருடிய பெண்ணுக்கு ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா நீதவான் நீதிமன்றம் இத்தண்டனையை விதித்துள்ளது.

குறித்த பெண் திருடிய பிஸ்கற் பக்கற்றின் விலை 120 ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தண்டப்பணத்துக்கு மேலதிகமாக அந்தப் பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது 5 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு 5 ஆயிரம் ரூபா நட்ட ஈடு வழங்கும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*