;
Athirady Tamil News

கிராம சக்தி வலைப்பின்னல் அங்கஜன் இராமநாதனால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுப்பு..!! (படங்கள்)

0

விவசாய பிரதி அமைச்சரும் சுதந்திரக்கட்சியின் உபதலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் பிரதேச ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கிராம சக்தி வேலைத்திட்டத்திற்கு சிறந்த வலையமைப்புடன் கூடிய செயற்திட்டத்தினை செயற்திறனாக பிரதேச மற்றும் கிராம ரீதியில் சேவைகளை முன்னெடுப்பதற்காக சுதந்திரக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமயின் கீழ் அபிவிருத்தி குழு வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இவ் குழு வலையமைப்பில் பல்வேறு துறை சார்ந்தவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளமை கிராம மக்களினது தேவைகளையும் உரிய முறைமையில் அறிந்து சேவைகளாக தொடர்வதற்கு சிறந்த வலைப்பின்னலாக அமையும் எனவும் அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.

கிராம சக்தி வேலைத்திட்டம் யாழ் மாவட்டத்தில் பிரதேச ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு,பிரதேசமக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் குறித்து பிரதேச ரீதியாக சிறந்த வலையமைப்புக்களை உருவாக்கிக்கொள்ள விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களுடைய பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் அவர்களினால் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள காரியாலயத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இவ்வாறான பாரிய வலையமைப்புக்களை உருவாக்குவதன் மூலம் சிறந்த தொடர்பாடுகளை ஏற்படுத்துவதன் ஊடாக சிறந்த கிராம ரீதியிலான பிரதேச கட்டமைப்புக்களை உருவாக்கி கொள்ளலாம் என கௌரவ சதாசிவம் இராமநாதன் அவர்கள் கருத்து தெரிவித்தார்.சுதந்திர கட்சியின் உபதலைவராகவும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் பொறுப்பினை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − fourteen =

*