;
Athirady Tamil News

காணாமல் போயிருந்த 07 மீனவர்களும் மீட்பு..!!

0

காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைக்காக சென்று காணாமல் போயிருந்த 07 மீனவர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மாலைத்தீவு கடற் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மீன்பித்துறை அமைச்சு கூறியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 14ம் திகதி காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற ஆழ்கடல் படகு ஒன்று 07 மீனவர்களுடன் காணாமல் போயிருந்தது.

ஹிக்கடுவ, தெல்வத்தை, தொட்டகமுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 07 பேரே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 14 =

*