;
Athirady Tamil News

மட்டக்களப்பில் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம்..!!

0

‘இளம் சமுதாயத்தினரை போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்’ போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம் மட்டக்களப்பில் பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.

இதன்போது, போதைப்பொருள் பாவனையால் இன்றைய சமூகத்திற்கு ஏற்படும் தாக்கம், தொற்றா நோய்கள், தொற்று நோய்கள் பற்றி சிரேஷ்ட உளநல வைத்தியர் ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.

எதிர்கால சமுதாயத்தினைரை போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவித்து ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் பாடசாலை அதிபர், மண்முனை மேற்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர், மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*