;
Athirady Tamil News

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்..!!

0

அடுத்த வருடம் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குப்பை அச்சுறுத்தலிற்கு ஒரு தீர்வைப் பெறும் வகையில் அடுத்த வருடம் ஜுன் மாதம் திண்மக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளார்.

திண்மக்கழிவுகளை புத்தளத்திலுள்ள அருவக்காலு பகுதியில் இடுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் குறித்த திட்டத்தை இவ்வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஆனந்தா பாடசாலையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதிண்மக் கழிகளை சேமிக்கவென அமைக்கப்பட்ட சம்பத் பியச எனும் கழிவு சேமிப்பகத்தை திறந்துவைத்து உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலைகளிலுள்ள கழிவுகளை அகற்றும் வகையில் பாடசாலை மாணவர்களும் இத்திட்டத்தை மேற்கொள்ளலாம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், ஆனந்தா பாடசாலை மாணவர்களே ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரியாக முதலில் இத்திட்டத்தை செயற்படுத்தலாம் என தெரிவித்தார்.

மீதொட்டமுள்ள குப்பை மேட்டு அனர்த்தத்தில் டீ.எஸ் சேனநாயக்க பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து 1 கிராம் குப்பைக்கூட தனது பாடசாலையிலிருந்து வெளியே போகக்கூடாதென டீ.எஸ் சேனநாயக்கா பாடசாலை தீர்மானித்ததையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கடந்த 1997ஆம் ஆண்டு கரு ஐயசூரிய மாநகர முதல்வராக இருந்த போது இரசாயன முறையில் குப்பைக் கழிவுகளை வெளியேற்ற திட்டமிட்டபோது, அதனை அரசியல்வாதிகள் போராட்டங்களை நடத்தி செயற்படவிடாது தடுத்து நிறுத்தினர். இறுதியில் அது 34 பேரை காவுகொண்ட அனர்த்தமாக மாறியதென அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தற்போதைய சந்ததிகள் மாசடைந்த சூழலிலேயே வாழ்கின்றனர் என்றும் அமைச்சர் சம்பிக்க குறிப்பிட்டார். இந்நிலையில், அடுத்த சந்ததிக்காவது சூழலை மாசடையாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமென அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − fifteen =

*