;
Athirady Tamil News

விசேட தேவைக்குட்பட்டவருக்கு சத்தியலிங்கத்தால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.!!

0

வவுனியா குருமண்காட்டில் ஈருருளிதிருத்தகம் நடாத்திவரும் ஒருகாலை இழந்த விசேடதேவைக்குட்பட்டவருக்கு ரூபா 25,000 பெறுமதியான ஈருருளிக்கான உதிரிபாகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மாகாண சபை உறுப்பினருக்கான 2018ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் இந்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குடியிருப்பில் அமைந்துள்ள உறுப்பினரின் உத்தியோகபூர்வ அலுவலகமான தாயகத்தில்வைத்தே பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளர் சி.சிவசோதி, மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி,தாண்டிக்குளம் வட்டார உறுப்பினர் க.கேதீஸ்வரன், கட்சியின் முக்கியஸ்த்தர் ஜெயராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*