;
Athirady Tamil News

அண்ணன் தங்கை என தெரியாமலேயே காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி..!!

0

காதலர்கள் இருவர் தாங்கள் ஒரே தந்தைக்கு பிறந்த அண்ணன், தங்கை என தெரியாமலேயே காதலித்து திருமணம் செய்த சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது.

ஜேம்ஸும், மவுராவும் வேறு வேறு பகுதியில் வசித்து வந்த நிலையில் இரவு விடுதி ஒன்றில் சந்தித்து நட்பாகியுள்ளனர்.

நட்பானது மெல்ல காதலாக மாற ஒருவர் மீது இன்னொருவர் உயிரையே வைக்கும் அளவு நேசிக்க தொடங்கினார்கள்.

ஜேம்ஸின் தந்தை டாம் அவரை பத்து வயதாக இருக்கும் போதே பிரிந்துவிட்டார், தாய் கார்மலுடனும் ஜேம்ஸின் உறவுமுறை மெச்சும்படியாக இல்லை.

அதே போல மவுராவின் பெற்றோர் அவர் குழந்தையாக இருக்கும் போதே விட்டு சென்றுள்ளனர்.இந்நிலையில் ஜேம்ஸும், மவுராவும் திருமணம் செய்து கொண்டார்கள்

இதன்பின்னர் தாய் கார்மலை சந்தித்த ஜேம்ஸ் தனது திருமணம் குறித்து கூறியுள்ளார்.அப்போது மவுரா குடும்பம் குறித்து கார்மல் விசாரித்துள்ளார்.

அப்போது தான் மவுரா தனது கணவர் டாமுக்கு பிறந்தவர் என கார்மலுக்கு தெரியவந்தது.அதாவது, டாம் – கார்மலுக்கு ஜேம்ஸ் பிறந்த பின்னர், கார்மலை டாம் பிரிந்துள்ளார்.

பின்னர் வேறு பெண்ணை அவர் திருமணம் செய்த நிலையிலேயே அவருக்கு மவுரா பிறந்துள்ளார்.இதையடுத்தே ஜேம்ஸும், மவுராவும் அண்ணன், தங்கை என தெரியவந்தது.

இதோடு கார்மல் விண்செண்ட் என்பவரை இரண்டாம் திருமணம் செய்த நிலையில் அவர் தான் ஜேம்ஸின் தந்தை என பொய்யாக கூறியதையும் தெரிவித்தார்.முதலில் இது ஜேம்ஸுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் பின்னர் சுதாரித்து கொண்டார்.

இதன் பின்னர் ஜேம்ஸ் – மவுரா தம்பதிக்கு பின்னர் குழந்தை பிறந்தது, தங்களின் வாழ்க்கையில் நடந்தது அனைவருக்கும் ஒரு பாடம் எனவும் இது போல யாருக்கும் நடக்கக்கூடாது எனவும் ஜேம்ஸும், மவுராவும் கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 14 =

*