;
Athirady Tamil News

நாய் உணவை பெற்ற பிள்ளைக்கு ஊட்டிய கொடூர தாய்: வெளியான வீடியாவால் அதிர்ச்சி..!!

0

பிரேசில் நாட்டில் தாயார் ஒருவர் நாய் உணவை பெற்ற பிள்ளைக்கும் ஊட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மனதைப் பிசையும் அந்த வீடியோவை குறித்த தாயாரே பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரேசிலின் Goias மாகாணத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 2 வயது குழந்தை நாய்க்கு வழங்கப்படும் உணவை சாப்பிடுவது கண்டு அந்த தாயார் சத்தமிட்டு சிரிப்பதும்,

இந்த காட்சிகளை கண்டிருந்த குழந்தையின் பாட்டி, அந்த உணவு குழந்தையின் உடலுக்கு தீங்கானது என கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது

குறித்த குழந்தையானது மூளை வளர்ச்சி குறைவானது என உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துவரும் நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெற்ற பிள்ளைக்கு நாய்க்கான உணவை ஊட்டிய தாயார் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் இன்னொரு பாட்டிக்கு இந்த வீடியோ கிடைத்ததும் அதிர்ந்த அவர் உடனடியாக தமது மருமகளின் குடியிருப்புக்கு சென்று குழந்தையை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − eight =

*