;
Athirady Tamil News

வட­மா­காண முதல்வரின் தாமதத்தால்- திரும்பிச் சென்றது அணி..!!

0

வட­மா­கா­ணத் தட­க­ளத் தொட­ரின் இறு­தி­நா­ளான நேற்று, தலைமை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட வட­மா­காண முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரனை வர­வேற்­ப­தற்­காக இன்­னிய நிகழ்வு ஏற்­பா­டு­ செய்­யப்­பட்­டி­ருந்­தது.

எனி­னும் முத­ல­மைச்­சர் குறித்த நேரத்­துக்கு வருகை தரா­ததை அடுத்து இன்­னிய நிகழ்வை நடத்­து­வ­தற்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்ட குழு திரும்­பிச் சென்­றது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் நேற்று வரை இந்­தத் தொடர் நடை­பெற்­றது. இறுதி நாளான நேற்று முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரன் தலைமை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார். அவரை வர­வேற்­ப­தற்­காக பாரம்­ப­ரிய இன்­னிய நிகழ்­வுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் மாண­வர்­கள் இந்த நிகழ்வை நடத்­து­வ­தற்­காக ஒழுங்­க­மைக்­கப்­பட்­டி­ருந்­த­னர். இன்­னி­யக் குழு குறித்த நேரத்­தில் மைதா­னத்­துக்கு வருகை தந்­தி­ருந்­தது.

எனி­னும் முதல்­வர் உரிய நேரத்­துக்­குச் சமூ­கம் தர­வில்லை. சுமார் ஒரு மணித்­தி­யா­லம் 45 நிமி­டங்­கள் தாம­த­மா­கவே முதல்­வர் நிகழ்­வுக்கு வருகை தந்­தார். எனி­னும் அவர் வரு­வ­தற்கு முன்­ன­தா­கவே இன்­னி­யக் குழு அங்­கி­ருந்து புறப்­பட்­டுச் சென்­றது.

இது தொடர்­பில் இன்­னி­யக் குழு­வின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரைத் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது, ‘‘நிகழ்­வு­கள் 2.30 மணிக்கு ஆரம்­ப­மா­கும் அதற்­கேற்ப தயா­ரா­கு­மாறு எமக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன்­படி நாமும் துல்­லி­ய­மக 2.30 மணிக்கு மைதா­னத்­தில் எமது குழு­வி­ன­ரு­டன் நின்­றோம்.

ஆனால் முத­ல­மைச்­சர் வரு­வ­தற்கு ஒரு மணித்­தி­யா­லம் தாம­த­மா­னதை அடுத்து நாம் அங்­கி­ருந்து புறப்­பட்­டுச் சென்­றோம். மாண­வர்­கள் முகப்­பூச்­சுக்­க­ளு­டன் நீண்ட நேரம் காத்­தி­ருந்­த­னர். அவர்­க­ளுக்கு ஒவ்­வா­மை­கள் வர வாய்ப்­பி­ருந்­ததை அடுத்தே நாம் நிகழ்­வைக் கைவி­டும்­ப­டி­யாக ஆயிற்று’’ என்று அவர் தெரி­வித்­தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 2 =

*