;
Athirady Tamil News

சிவா­ஜி­லிங்கத்தை தூக்கி வெளியே போடுங்­கள் -அஸ்­மின் ஆவே­சம்..!!

0

வடக்கு மாகாண சபை­யின் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி ­லிங்­கத்தை படைக்­க­லச் சேவி­தர்­க­ளைக் கொண்டு குண்­டுக் கட்­டாக தூக்கி வெளியே போடுங்­கள் என்று நேற்று ஆவே­சப்­பட்­டார் அதே கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரான மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரான ஐ.அஸ்­மின்.

வடக்கு மாகாண சபை­யின் அமர்வு நேற்று இடம்­பெற்­ற­போது ஒவ்­வொரு உறுப்­பி­ன­ரின் கருத்­துக்­கும்­சி­வா­ஜி­லிங்­கம் தொடர்ச்­சி­யாக கருத்­துத் தெரி­வித்­துக் கொண்­டி­ருந்­தார். சக உறுப்­பி­னர்­கள் பேசும்­போ­தும், இடை­யூறு விளை­விக்­கும் வகை­யில் இடை­இ­டையே குறுக்­கிட்­டுப் பேசிக் கொண்­டி­ருந்­தார். இந்த நிலை­யி­லேயே அஸ்­மின் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

‘‘சக உறுப்­பி­னர்­க­ளின் மன­தைப் புண்­ப­டுத்­தும் வகை­யில் சிவா­ஜி­லிங்­கம் தொடர்ந்து பேசு­கின்­றார். அவைத் தலை­வர் இத­னைத் தொடர்ந்து அனு­ம­திக்­கப் போகின்­றீர்­களா? சிவா­ஜி­லிங்­கம் தொடர்ந்­தும் இவ்­வாறு செயற்­பட்­டால், படைக்­க­லச் சேவி­தர்­கள் ஊடாக குண்­டுக் கட்­டாக தூக்கி அவரை வெளியே போடுங்­கள்’’ – என்­றார் அஸ்­மின்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 7 =

*