;
Athirady Tamil News

வவுனியாவில் புலிகள் உருவாக்கிய கைக்குண்டு ஒன்று மீட்பு..!! (படங்கள்)

0

புலிகள் உருவாக்கிய கைக்குண்டு ஒன்று மீட்பு இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா இரட்டை பெரியகுளம் தெரிவித்தனர்.

வவுனியா இரட்டை பெரியகுளம் அளுத்கம பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றை துப்புரவாக்கி நிலத்தை பண்படுத்தும் போது வெடிக்காத நிலையில் உள்ள கைக்குண்டு ஒன்றை அவதானித்துள்ளார்.

இதன் பின்னர் இரட்டை பெரியகுளம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையின் போது மீட்கபட்ட குண்டு தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தயாரிப்பாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் நாளைய தினம் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் மூலம் குறித்த கைக்குண்டு அப்பகுதியில் வைத்தே செயலிழக்கசெய்யபடவுள்ளமை குறிப்பிட தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

Leave A Reply

Your email address will not be published.

seventeen + eleven =

*