;
Athirady Tamil News

நாட்டுக்கு ராணியானாலும் குழந்தைக்கு அம்மாதான்: இந்த அம்மாவைத் தெரிகிறதா?..!!

0

எவ்வளவு பெரிய பிரபலமானாலும் குழந்தைக்கு அம்மாதான் என்பதை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்ட ஒரு வீடியோ உறுதி செய்கிறது.

விம்பிள்டன் போட்டியில் விளையாடச் செல்லும் முன் செரீனா தனது மகளுடன் மேக் அப் போட்டுக் கொள்ளும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் குட்டி ஒலிம்பியா அம்மாவின் மேக் அப் செட்டை வைத்து விளையாடிக் கோண்டிருக்கிறாள்

மேக் அப் செட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளாக எடுத்து வாயில் வைக்க முயல்கிறாள் அவள். அவை ஒவ்வொன்றாக திரும்ப வாங்கும் செரீனா மகளுக்கு அன்பான முத்தம் ஒன்றைக் கொடுக்கிறார்.

அம்மாவிடம் தன்னை தூக்கும்படி சமிக்ஞை கொடுக்க, செரீனா நீ நல்ல வேலை செய்தாய், ஆனால் அம்மா இவற்றையெல்லாம் கொண்டு போக வேண்டும் என்கிறார்.

மேக் அப் முடித்து விளையாட்டுப் போட்டிக்கு தயாரான செரீனா,பின்னர் Kristina Mladenovicவுடன் விளையாடி வெற்றி பெற்றது ஹைலைட்டான விடயம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 11 =

*