;
Athirady Tamil News

தேனிலவு சென்ற இடத்தில் கணவனுக்கு நேர்ந்த துயரம்! கண்ணீர் விட்டு அழுத மனைவி..!!

0

தேனிலவு சென்ற இடத்தில் கணவன் புட் பாய்சன் காரணமாக இறந்திறக்கலாம் என்ற மனைவி நினைத்திருந்த நிலையில், அவர் நுரையீரல் புற்று நோய் காரணமாக இறந்துள்ளார் என்பதைக் கேட்டு மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த Alan Simms(31)-Aimee(33) தம்பதி திருமணம் முடிந்த சில தினங்களில் தேனிலவிற்காக ஆப்ரிக்கா நாட்டின் Cape Verde பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது Alan Simms-க்கு திடீரென்று வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலே பரிதாபமாக இறந்துள்ளார். திருமணம் முடிந்த 8 நாட்களிலே கணவன் இறந்த துக்கத்தால் Aimee மிகுந்த வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், கடந்த 2011-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் ஒரு இரவு கேளி விடுதியில் சந்தித்துள்ளனர்.

இதையடுத்து இருவர்களும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், 2014-ஆம் ஆண்டு Aimee தன்னுடைய நண்பர் Alan Simms இருக்கும் வீட்டின் அருகிலே வாடகைக்கு தங்கியுள்ளார்.

அதன் பின் இருவரும் நண்பர்களாக பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது Lanzarote பகுதிக்கு இருவரும் ஒரு பயணம் மேற்கொண்ட போது, Alan Simms தன்னுடைய காதலை கூறியுள்ளார்

காதலர்களாக இருந்து வந்த இவர்கள் கடந்த மே மாதம் 19-ஆம் திகதி திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்த கையோடு Cape Verde பகுதிக்கு தேனிலவு சென்றுள்ளனர்.

மூன்று நாட்கள் அங்கு இருவரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், 27-ஆம் திகதி Alan Simms-க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இருந்த செவிலர்களோ புட் பாய்சன் தான் ஆகியிருக்கும் என்று கூறி மருந்து கொடுத்து அனுப்பியுள்ளனர்.

ஆனால் அறைக்கு சென்ற சில மணி நேரங்களிலே அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அனுமதித்த சில மணி நேரங்களிலே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். புட்பாய்சன் காரணமாக இறந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் நுரையீரல் புற்று நோய் காரணமாக இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aimee தன்னுடைய கணவருக்கு நுரையீரல் புற்று நோய்க்கான அறிகுறியே இல்லை எனவும், அவர் எப்படி இதன் காரணமாக இறந்திருக்க முடியும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − eight =

*