;
Athirady Tamil News

இங்கிலாந்து கால்பந்து போட்டியை பார்த்தபடியே தம்பதியரான ஜோடி! சுவாசிய திருமணம்..!!

0

ஸ்வீடன் நாட்டுக்கு எதிரான காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 2- 0 என்ற கணக்கில் வென்றுள்ளது.இந்த வெற்றியை இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

நேற்றைய போட்டியை பார்ப்பதற்காக இங்கிலாந்து மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் , நேற்றைய தினத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடியினர், திருமணம் நடைபெறும் ஒட்டலில் வைத்து காலிறுதி போட்டியை ஒளிபரப்பியுள்ளனர்.

ஜான் – நிக்கியின் திருமணம் நேற்று நடைபெற்றது.

இவர்களது திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் தங்களது திருமணத்தை மட்டும் கண்டுகளிக்காமல் கால்பந்து போட்டியையும் பார்க்க வேண்டும் என்பதற்காக, திருமணம் நடக்கும் ஒட்டல் அறையில் கால்பந்து போட்டியை ஒளிபரப்பியுள்ளார்கள்.

திருமணத்திற்கு வந்தவர்கள் ஒரு பக்கம் திருமணத்தையும், மறுபக்கம் கால்பந்து போட்டியையும் கண்டுகளித்துள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்து, ஒருவேளை திருமணத்திற்கு தாமதமானால் நாம் கால்பந்து போட்டியை பார்க்கலாம் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.மேலும் திருமண ஜோடிகளும் கால்பந்து போட்டியை ரசித்தபடியே தம்பதியராகியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − three =

*