;
Athirady Tamil News

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் கைது..!!

0

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சியராலியோன் நாட்டை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு அதிகாரிகளால் குறித்த சந்தேபநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*