;
Athirady Tamil News

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தால் தெற்காசிய சாதனையாளன் கிந்துஷன் கௌரவிப்பு..!! (படங்கள்)

0

கடந்த 06.05.2018 இல் கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் 5000m ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெண்கலம் வென்று இலங்கை வடமாகாணம் வவுனியா மாவட்டம் மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் என்பவற்றுக்கு பெருமை சேர்த்த மாணவன் சிவானந்தன் கிந்துசன், பயிற்றுவிப்பாளர் நவநீதன் மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான கின்னஸ் சாதனையாளர் கனகேஸ்வரன் கணேஸ்வரன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 11.07.2018 புதன்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் சாதனையாளர்கள் பாடசாலை சமூகத்தினரால் மலர்மாலை அணிவித்து பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டு காலைப் பிரார்த்தனை வேளையில் பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துப்பா வழங்கியும் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் ஆசிய மெய்வல்லுனர் தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் 5000m ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற மாணவன் கிந்துசன் அவர்களுக்கு சிறப்பு மாணவ முதல்வர் சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பிரதிஅதிபர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*