தீயாய் வேலை செய்யனும் குமாரு.. குரோஷிய தீயணைப்புப் படையினர் செய்த காரியத்தைப் பாருங்க..!! (வீடியோ)

குரோஷியா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கு முன்னேறி அந்த நாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த நிலையில் ஒரு கலகலப்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஜூலை 7ம் தேதி குரோஷியாவும், ரஷியாவும் காலிறுதிப் போட்டியில் சந்தித்தன. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
ஆனால் புள்ளிகள் கூடுதலாக வைத்திருந்ததால் குரோஷியா அரை இறுதிக்கு முன்னேறியது. நேற்று அரைஇறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் விரட்டியடித்து முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குரோஷியா. முன்னதாக ரஷ்யாவுடன் நடந்த போட்டியை ரசிகர்களும், பொதுமக்களும் படு ஆர்வத்துடன் கண்டு களித்து குதூகலித்தனர்.
அந்த நாட்டு தீயணைப்புப் படை நிலையம் ஒன்றில் தீயணைப்புப் படை வீரர்கள் ஒரு டிவியை கொண்டு வந்து தீயணைக்கும் வண்டிக்கு முன்பு வைத்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது பணி தொடர்பான அழைப்பு மணி ஒலிக்கத் தொடங்கியதும் அப்படியே போட்டியை விட்டு விட்டு தலை தெறிக்க கடமையைச் செய்ய ஓடிய காட்சி கலகலப்பாக உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வேலைன்னு வந்துட்டா தீயா மாறிடனும்கிறது இதுதான் போல!
கொண்டாடத்திலும் கடமையில் சரியாக இருந்த குரோஷிய… by oneindiatamil