;
Athirady Tamil News

வறிய குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்பு..!!

0

இலங்கையில் மின்சார வசதிகள் இல்லாத வறிய குடும்பங்களுக்கு கம்பெரலிய திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்கச் செய்வது அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னைய ஆட்சி காலத்தில் சகல பிராந்தியங்களுக்கும் மின்வலு வழங்கப்பட்டது. ஆனால், வறிய குடும்பங்களுக்கு மின்சார வசதிகள் கிடைக்கவில்லை. இத்தகைய 40 ஆயிரம் குடும்பங்கள் எஞ்சியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணத்தை 20 வருடங்களில் மின் கட்டணப் பட்டியலிலிருந்து குறைத்துக் கொள்ளப் போவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − seventeen =

*