;
Athirady Tamil News

தமிழர் தேவைகளை பகிரங்கப்படுத்துவோர் பயங்கரவாதிகளல்லர்!- நல்லாட்சியிடம் சி.வி..!!

0

தமிழ் மக்களின் தேவைகளை பகிரங்கப்படுத்துவோரை இந்த அரசாங்கம் பயங்கரவாதிகளாகவே நோக்குவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகத்தை இன்று (வியாழக்கிழமை) திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

”இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் பிரதிநிதிகளின் ஒத்திசைவுடன் மூன்று வரவு செலவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், அதில் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய ஒதுக்கீடுகளோ, திட்டங்களோ உள்வாங்கப்படாமை கவலையளிக்கின்றது.

இதனை பகிரங்கப்படுத்தினால் எம்மை அரசாங்கம் பயங்கொண்டு பார்ப்பதுடன், பயங்கரவாதிகள் என்று பகர்கின்றது” எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*