;
Athirady Tamil News

பிறந்த பச்சிளங் குழந்தையை கொடூரமாக தாக்கிய பெண்: மனதை பதை பதைக்க வைக்கும் காட்சி..!!

0

Bulgaria நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில், குழந்தைகள் நல பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்று அழுதுகொண்டே இருந்ததால், மருத்துவ பணிப்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் மனதை நொறுக்கும் வகையில் அமைந்துள்ளது.

Bulgaria நாட்டு தலைநகர் Sofia பகுதியில் அமைந்துள்ளள மருத்துவமனை ஒன்றில் பிறந்து நான்கு நாட்களேஆகிய நிலையில், குழந்தை ஒன்று அழுது கொண்டே இருந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மருத்துவ பணிப்பெண் Emiliya Kovacheva, சம்மந்தப்பட்ட குழந்தையை அறைந்ததோடு மட்டுமில்லாமல் தலையிலும், முகத்திலும் இரக்கமின்றி குத்துகிறார்

இதனால் அந்த குழந்தை பலத்த காயமடையவே, மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்பொழுது, Emiliya சார்பில் வாதாடிய வழக்கறிஞர், சம்பவம் நிகழ்ந்த அன்று 24 மணிநேரமாக Emiliya வேலை செய்து கொண்டிருந்ததால் பெரும் மனஅழுத்தத்தில் இருந்தார்

அப்பொழுது அந்த குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் மற்ற குழந்தைகளும் உறங்காமல் எழ ஆரம்பித்தது. இதனாலே Emiliya அவ்வாறு நடந்து கொண்டார் என விளக்கமளித்தார்

ஆனால் அவரது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, Kovacheva-விற்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.

பின்னர் இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மற்றொரு நீதிமன்றம், Emiliya-விற்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைத்து, அவர் எங்கும் அனுமதியின்றி செல்லக்கூடாது எனவும், வீட்டில் இருக்கும் வயதான பெற்றோரை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தியும், அவரை வீட்டுக்காவலில் வைத்தது

இந்தநிலையில் இதுகுறித்து பேசிய குழந்தையின் பெற்றோர் Rumen Dimitrov – Stanislava Dimitrova, தற்போது Nikol Dimitrova-விற்கு மூன்று வயது ஆகிறது. குழந்தையாக இருக்கும் போது நடந்த தாக்குதலினால் அவளுக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுகிறது என கூறினார். மேலும், Emiliya-விற்கு ஆயுள் தண்டனையை விட வேறு எந்த தன்டையும் கிடைப்பதை நாங்கள் விரும்பவில்லை என கூறியதோடு, Emiliya சுதந்திரமாகி சுற்றி திரியும் அளவிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு குறித்தும் விமர்சித்துள்ளனர்

blob:https://www.thesun.co.uk/67457fc0-2d15-4b49-9f84-a034fdec054a

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*