;
Athirady Tamil News

பாகிஸ்தானில் 3 ரெயில்கள் மோதல்: 150-க்கு மேற்பட்டோர் பலி- 13-7-2005..!!

0

குவேட்டா எக்ஸ்பிரஸ் ரெயில் சர்ஹாட் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது கராச்சி எக்ஸ்பிரஸ் சிக்னல் பிரச்சினையால் பின்னால் வந்து மோதியது. இதனால் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டன.

தடம் புரண்ட ரெயில்கள் மீது தெகாம் ரெயில் பயங்கரமாக மோதியது. இந்த மூன்று ரெயில்களிலும் சுமார் 3000 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இதே தேதியில் நடந்த மேலும் முக்கிய சம்பவங்கள்:-

* 1844 – இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

* 1869 – இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.

* 1908 – லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.

* 1878 – பெர்லின் உடன்படிக்கை: செர்பியா, மொண்டெனேகுரோ, ருமேனியா ஆகிய நாடுகள் ஒட்டோமான் பேரரசில் இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றன.

* 1923 – லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது ஹாலிவுட்லாந்து என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.

* 1930 – முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.

* 1931 – காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

* 1941 – இரண்டாம் உலகப்போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

* 1971 – மொரோக்கோவில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.

* 1977 – மின்சார இழப்பினால் நியூயோர்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.

* 1997 – சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.

* 2001 – சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008-க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*