;
Athirady Tamil News

மரத்துடன் மோதிய சிறிய ரக லொறி: இருவர் வைத்தியசாலையில்..!! (படங்கள்)

0

சிறிய ரக லொறியொன்று பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதி விபத்து இருவர் அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதி.

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் பசுமலை பகுதியில் 2018.07.12 மாலை 3.00 சிறிய ரக லொறி ஒன்று பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இருவர் காயங்களுக்கு உள்ளாகி அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பகுதியிலிருந்து டயகம பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சாரதிக்கு வாகனத்தில் ஏற்பட்ட கோலாறு காரணமாக வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்; மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

D.S.சுரேன் – தலவாக்கலை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*