;
Athirady Tamil News

வவுனியாவில் “புளொட்” அமைப்பின், 29 வது வருட “வீர மக்கள்” நினைவு தினம் அனுஸ்டிப்பு ஆரம்பம்.. (படங்கள்)

0

தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான அ. அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் இன்று (13) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

தேசிய இன விடுதலை போராட்டத்தில் தமது இன்றுயிரை இழந்த கழக போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வீரமக்கள் தினத்தின் முதல் நாள் நிகழ்வாக இந் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

29 நினைவு தினமும் 29 ஆவது ஆண்டு வீரமக்கள் தினமும் ஒரு வாரகாலத்திற்கு உமாமகேஸ்வரன் சமாதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி உமாமகேஸ்வரனின் நினைவு தினமும் வீரமக்கள் தினமும் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தால் வருடம் தோறும் கடைப்பிடிக்கபட்டு வரும் வீர மக்கள் தினம் இன்று வவுனியா கோவில்குளம் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவர்களில் ஒருவரும்,
நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் (மோகனால்) கழகத்தின் கொடி ஏற்றபட்டதுடன் 13 யூலை 1989 ம் ஆண்டு படுகொலை செய்யபட்ட அ.அமிர்தலிங்கத்தின் திருவுருவ படத்திற்கு நகரசபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருமான நா. சேனாதிராசாவால் ஒளிச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்ததுடன் நினைவுபேருரையும் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வடக்குமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர்காளன ஜெகதீஸ்வரன், குகதாசன் வவுனியா நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராசா, சு. காண்டிபன், தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான யோகன், நந்தன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கதலைவர் ரவீந்திரன், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 1 =

*