;
Athirady Tamil News

126 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது தென்னாபிரிக்க அணி..!!

0

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

அதன்படி பதிலுப்பு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சற்று முன்னர் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அந்த அணி சார்பாக அதிகபட்சமாக பெப்டு பிளசிஸ் 49 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன்படி இலங்கை அணி 161 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 17 =

*