;
Athirady Tamil News

கனடா – குரும்பசிட்டி நலன்புரிச்சபை வெள்ளிவிழா..!! (படங்கள்)

0

கனடா – குரும்பசிட்டி நலன்புரிச்சபை வெள்ளிவிழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

கனடா – குரும்பசிட்டி நலன்புரிச்சபையின் வெள்ளிவிழா பாராட்டுவிழா நிகழ்வுகள் இன்று 13.07.2018 வெள்ளிக்கிழமை மாலை 03 மணியளவில் குரும்பசிட்டி ஆ.சி.நடராசா ஞாபகார்த்த பொது நூலக மண்டபத்தில், நிலையத்தலைவர் அ.யோகநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தங்கராசா, யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி யோ.நந்தகோபன், வலி.வடக்கு பிரதேசசெயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் த.ரஜிந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவுப்பொருட்கள், உடுபுடவைகள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

விருந்தினர்கள், பயனாளிகள், சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பொதுமக்கள், ஊரவர்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*